Innamum Thamathamen Inpa Saththam இன்னமும் தாமதமேன் இன்ப சத்தம்
இன்னமும் தாமதமேன் இன்ப சத்தம்
Lyrics
1. இன்னமும் தாமதமேன்
இன்ப சத்தம் கேளாயே
இன்னலின்றி காத்திட
இயேசுன்னை அழைக்கிறாரே
ஜீவனின் அதிபதி இயேசுவண்டை
நித்திய ஜீவனுண்டே
நீங்கிடா அவர் அன்பையே
நாடி நீ வந்திடாயோ
2. கல்வாரி மேட்டினிலே
கரங்களை விரித்தவராய்
காத்துன்னை இரட்சித்திட
கனிவுடன் அழைக்கிறாரே
3. லோகத்தின் இன்பமெல்லாம்
மாறிடும் க்ஷணப் பொழுதில்
மாறிடா நேசர் இயேசு
மாண்புடன் அழைக்கிறாரே
4. நாளை உன் நாளாகுமோ
நாடாயோ நாதனை நீ
நாசலோகை விட்டிட
நாதன் அழைக்கிறாரே
Details
- Numeric ID
- 5215
- Song ID
- innamum-thamathamen-inpa-saththam-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open