Ippo Naam Bethlegem Chendru பாமாலை: 57 இப்போ நாம் பெத்லெகேம் சென்று
பாமாலை: 57 இப்போ நாம் பெத்லெகேம் சென்று
Lyrics
1. இப்போ நாம் பெத்லெகேம் சென்று
ஆச்சரிய காட்சியாம்
பாலனான நம் ராஜாவும்
பெற்றோரும் காணலாம்;
வான் ஜோதி மின்னிட
தீவிரித்துச் செல்வோம்,
தூதர் தீங்கானம் கீதமே
கேட்போம் இத்தினமாம்.
2.இப்போ நாம் பெத்லெகேம் சென்று
ஆச்சரிய காட்சியாம்
பாலனான நம் ராஜாவும்
பெற்றோரும் காணலாம்;
தூதரில் சிறியர்
தூய தெய்வ மைந்தன்;
உன்னத வானலோகமே
உண்டிங் கவருடன்.
3. இப்போ நாம் பெத்லெகேம் சென்று
ஆச்சரிய காட்சியாம்
பாலனான நம் ராஜாவும்
பெற்றோரும் காணலாம்;
நம்மை உயர்த்துமாம்
பிதாவின் மகிமை!
முந்தி நம்மில் அன்புகூர்ந்தார்,
போற்றுவோம் தெய்வன்பை.
4. அப்போ நாம் ஏகமாய்க் கூடி
விஸ்வாசத்தோடின்றே
சபையி தங்கும் பாலனின்
சந்நிதி சேர்வோமே;
மகிழ்ந்து போற்றுவோம்
ஜோதியில் ஜோதியே!
கர்த்தா! நீர் பிறந்த தினம்
கொண்டாடத் தகுமே.
Details
- Numeric ID
- 5179
- Song ID
- ippo-naam-bethlegem-chendru-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0