Iraiva Nee Oru Sangeetham இறைவா நீ ஒரு சங்கீதம் அதில்

இறைவா நீ ஒரு சங்கீதம் அதில்
Unknown
Lyrics

Lyrics

இறைவா நீ ஒரு சங்கீதம் – அதில் இணைந்தே பாடிடும் என் கீதம் உன் கரம் தவழும் திருயாழிசை – அதில் என் மனம் மீட்டிடும் தமிழ் ஏழிசை புல்லாங்குழலென தனித்திருந்தேன் – அதில் இசையாய் என் மனம் புகுந்திடுவாய் – 2 பாவியென் நெஞ்சமும் துயில் கலையும் – புதுப் பாடலால் என்னகம் இணைந்திடுமே எரிகின்ற சுடராக விண்மீன்கள் உன் வானில் எனை இன்று திரியாக ஏற்றாயோ இறைவா காற்றாகி ஊற்றாகி கார்மேக மழையாகி வாழ்வாகி வழியாகி வாராயோ இறைவா – 2 கல்லிலும் முள்ளிலும் கால் நடந்தாலும் – நீ தோளினில் சுமந்தே வழிநடந்தாய் – 2 நாதா உன் வார்த்தைகள் வானமுதம் – 2 என்னை நாளெல்லாம் வாழ்விக்கும் தேனமுதம் தோள் மீது தாலாட்டும் தாயாகும் தெய்வம் தாள் போற்றி நின்றாலே நூறாகும் செல்வம் அருளாளன் நீயின்றி அழகேது என்னில் அதை நானும் அடையாமல் விடிவேது மண்ணில் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
154
Song ID
iraiva-nee-oru-sangeetham-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0