Lyrics
இஸ்ரவேலின் தேவனே
செங்கடலை பிளந்தீரே - பார்வோனின்
சேனைகளை மூழ்கடித்தவரே -2
உம்மை துதித்தார்கள் உம்மை பாடினார்கள்
ஆனந்தமாய் ஆர்ப்பரித்தார்கள்-2
1. ராஜாதி ராஜாவே உமது
ஜனத்தை விடுவித்தீர்-பார்வோனின்
சேனையை கடலின் நடுவே மூழ்கடித்தீர்
2. தூதரின் மன்னாவை உமது
ஜனத்திற்கு கொடுத்தீர்-மாராவின்
தண்ணீரை மதுரமாக மாற்றினீரே
3. வாக்குதத்த தேசத்துக்குள்
அற்புதமாக நடத்திச் சென்றீர்- வனாந்திர
பாதையில் நாற்பது வருடங்கள் நடத்தினீரே
Details
- Numeric ID
- 2195
- Song ID
- isaravelin-devane-senkadalai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0