Lyrics
இஸ்ரவேலின் தேவனே
பரிசுத்த இராஜனே – 2
உம்மை துதித்திடுவோம் ஆராதிப்போம்
உயர்த்திடுவோம் வல்லவரே – 2
1. தாயின் கருவிலே உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தது நீர்தானய்யா – 2
உள்ளங்கையில் என்னை வரைந்தவரே
உயரத்தில் என்னை வைத்தவரே-2
2. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
மூலைக்கல்லாக மாற்றினீரே – 2
இராஜாக்களோடு அமர செய்தீர்
ஆசாரியர்களும் ஆக்கினீரே – 2
3. சிறியவனை நீர் புழுதியிலிருந்து
தூக்கி எடுத்து வைத்தீரைய்யா –2
வெட்கப்பட்ட இந்த தேசத்திலே
கீர்த்தியும் புகழ்ச்சியும் ஆக்கினீரே – 2
உம்மையே நாங்கள் நம்பி உள்ளோம்
கைவிடாத எங்கள் தெய்வம்
நீரே – 4
துதித்திடுவோம் ஆராதிப்போம்
உயர்த்திடுவோம் வல்லவரே – 4
Details
- Numeric ID
- 129
- Song ID
- isravelin-dhevane-parisutha-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0