Ithuvarai Nadathi Deivame இதுவரை நடத்திய தெய்வமே இரு

இதுவரை நடத்திய தெய்வமே இரு
Unknown
PPT
Lyrics

Lyrics

இதுவரை நடத்திய தெய்வமே இருகரம் கூப்பி உம்மை துதிக்கின்றேனே எனக்காக யாவையும் செய்தவரே இயேசுவே உம்மை நான் உயர்த்திடுவேன் அழுதிட்ட நேரத்தில் அணைத்தவர் நீர் அடம்பிடித்த நேரத்தில் அடித்தவர் நீர் அடித்தாலும் அணைத்தாலும் நீர் தான் என் தெய்வமே உம்மை விட்டு விலகமாட்டேனே நடந்திட்ட பாதையில் துணை நின்றீரே பயந்திட்ட நேரத்தில் திடன் தந்தீரே வாழ்விலும் தாழ்விலும் நீர் தான் என் தெய்வமே உம்மை விட்டு விலக மாட்டேனே தனிமையின் நேரத்தில் உடன் இருந்தீரே தளர்ந்திட்ட நேரத்தில் தாங்கினீரே உறவுகள் பிரிந்தாலும் நீர் தான் என் தெய்வமே உம்மை விட்டு விலக மாட்டேனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3582
Song ID
ithuvarai-nadathi-deivame-lyrics-song-chords-ppt
Views
15
Downloads
2
Source
Open