Ivvuyar Malai Meedhinil 156 Pamalai Song Lyrics

Pamalai Song Lyrics

Lyrics

1 இவ்வுயர் மலை மீதினில் எம் நாதா , உந்தன் பாதத்தில் எம் பாவக் கண்ணால் காண்கிறோம் உம தாசர் பூர்வ பக்தராம்; சீனாய் மலை மேல் கற்பனை வானோரால் பெற்ற மோசேயை; தீ, காற்று, கம்பம் கன்டோனை மா மேன்மை சத்தம் கேட்டோனை. 2 இவ்வுயர் மலை மீதினில் எம் நாதர் சீஷர் மூவரே; கற்பாறை போன்ற பேதுரு நிற்பான் எப்பாவம் எதிர்த்து; இடி முழக்க மக்களாம்; கடிந்த பேச்சு யாக்கோபாம்; " அன்பே கடவுள்" போதிப்பான் உன்னத ஞானியாம் யோவான் 3 இவ்வுயர் மலை மீதிலும் உயர்ந்து உள்ளம் பொங்கிடும்; பரமன் ஜோதி தோன்றிடும் பகலோன் ஜோதி மாய்த்திடும்; மா தூய ஆடை வெண்மையே, ஆ மாந்தர் காணா விந்தையே; நாம் மேலும் மேலும் ஏறியே நம் நாதர் ரூபம் காண்போமே 4 இவ்வுயர் மலை மீதினில் எம் நாதர் தூய பாதத்தில் மா இருள் மேகம் மூடினும் மா ஜோதி பார்வை வாட்டினும் காண்போமே தெய்வ மைந்தனை கேட்போமே தெய்வ வார்த்தையை "இவர் என் நேச மைந்தனார்; இவர்க்கு செவி கொடுப்பீர்."

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5454
Song ID
ivvuyar-malai-meedhinil
Views
0
Downloads
0