Iyoo Nan Orupaava Song Tamil Christ…

Lyrics

ஐயோ நான் ஒருபாவ ஜென்மி ஆனேனே ஆண்டு ரட்சித் தருள்வாய் மனுவேலனே உய்யும்படி தெய்வமே உன்னை அல்லால் எனக்கோர் ஒதுக்கிட முண்டோ வேறே நல் வரமாய்ப் பெற்ற நீதி சுசி பாக்கியம் ஞானம் எலாம் இழந்து மனுவேலனே சொல்ல வெட்கம் அநீதி, சுசிகேடு நிர்பாக்கியம் துர்ப்புத்தியும் அடைந்தேன் மாட்சி உறும் சிங்கார வனமாம் என துளத்தை மங்கு கடாக்கி னேனே மனுவேலனே ஆட்சி கொளும் உன் சுத்த ஆலயமாம் என் நெஞ்சை அலகைக் கிடம் ஆக்கினேன் உன்னை முழுப் பெலத்தால் நேசியாமலே நெஞ்சம் உரங் கொண்ட பாவி ஆனேன் மனுவேலனே என்னை நிகராக என் பிறனை நேசியாமல் நான் இகலுற் றிருந்தேனையா துப்புர வாம் சுத்தக் கண்ணனே உன் முன் இன்னும் துணிகர மாய் நடந்து மனுவேலனே இப்படி ஜென்ம கன்ம பாவத்தால் கேடடைந்த ஏழைப் பாவிக் கிரங்காய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1833
Song ID
iyoo-nan-orupaava-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
12
Downloads
4
Source
Open