Jeeva Nathiyin Neerodai Pol ஜீவ நதியின் நீரோடை போல்
ஜீவ நதியின் நீரோடை போல்
Lyrics
ஜீவ நதியின் நீரோடை போல்
கல்வாரியின் இரத்தம் பாய்ந்தோடுதே
என் இயேசுவே உன் தயவால்
என் வாழ்வில் என்றும் அமைதியே
1. கர்த்தர் என் பெலனும் என் கேடகமாய்
கருத்துடன் காத்திட அழைத்ததால்
கண்ணீர் கவலை நீங்கிடவே
களிப்பின் ஊற்றாய் மாற்றினீரே
2. இயேசுவின் கரத்தின் கருவியாய்
நன்மை செய்ய அழைத்ததால்
வழுவாத வல்லமை வசனங்களை
வானவர் வந்து மாற்றினீரே
3. சபையின் மேன்மை சாட்சியாய்
சத்தியம் சொல்ல அழைத்ததால்
சந்தோஷ நதியின் வாழ்க்கையை
நாடெங்கும் பரப்ப மாற்றினீரே
4. சீயோனின் சிறந்த சிகரமாய்
செழித்து வளர அழைத்ததால்
எக்காளம் தொனிக்கும் நேரத்தில்
மறுரூபமாக மாற்றுவீரே
Details
- Numeric ID
- 5595
- Song ID
- jeeva-nathiyin-neerodai-pol-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open