Jeeva Thanneere Aaviyanavare …

ஜீவத்தண்ணீரே ஆவியானவரே

Lyrics

ஜீவத்தண்ணீரே ஆவியானவரே வற்றாத நதியாக வாரும் போதகரே வாருமையா போதகரே – 2 வற்றாத ஜீவ நதியாக – 2 1. கணுக்கால் அளவு போதாதையா முழங்கால் அளவு போதாதையா நீந்தி நீந்தி மூழ்கணுமே – 2 மிதந்து மிதந்து மகிழணுமே – 2 2. போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே – 2 சேருமிடமெல்லாம் ஆறுதலே – 2 செல்லுமிடமெல்லாம் செழிப்புதானே – 2 3. கோடி கோடி மீனவர் கூட்டம் ஓடி ஓடி வலை வீசணும் – 2 பாடி பாடி மீன் பிடிக்கணும் – 2 பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும் – 2 4. கரையோர மரங்கள் ஏராளமாய் கனி தர வேண்டும் தாராளமாய் – 2 இலைகள் எல்லாம் மருந்தாகணும் – 2 கனிகள் எல்லாம் உணவாகணும் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6138
Song ID
jeeva-thanneerae-aaviyanavarae
Views
0
Downloads
0