Jeevanin Ootraamay Yesu Paran ஜீவனின்‌ ஊற்றாமே இயேசு பரன்‌

ஜீவனின்‌ ஊற்றாமே இயேசு பரன்‌
Unknown
PPT
Lyrics

Lyrics

1. ஜீவனின்‌ ஊற்றாமே இயேசு பரன்‌ தீர்த்திடுவார்‌ உந்தன்‌ தாகமதை பாவங்கள்‌ ரோகங்கள்‌ சாபங்கள்‌ போக்கிட பரிவாய்‌ அழைக்கிறார்‌ வல்லவரே இயேசு நல்லவரே மிக அன்பு மிகுந்தவரே இயேசு வல்லவரே அவர்‌ நல்லவரே உனக்காகவே ஜீவிக்கிறார்‌ 2. ஆருமற்றவனாய்‌ நீ அலைந்தே பாவ உளை தனிலே அமிழ்ந்தே மாய்ந்திடாது உன்னைத்‌ தூக்கி எடுத்தவர்‌ மந்தையில்‌ சேர்த்திடுவார்‌ 3. வியாதியினால்‌ நொந்து வாடுவதேனோ நேயன்‌ கிறிஸ்து சுமந்ததனை சிலுவை மீதினில்‌ தீர்த்ததாலே இனி சுகமடைந்திடுவாய்‌ 4. பரனின்‌ அன்பதை அகமதிலே சொரிந்து தன்‌ திரு ஆலயமாய்‌ மாற்றியே தம்மைப்‌ போல்‌ தேவ சாயலாக்கி மகிமை சேர்த்திடுவார்‌ 5. வானமும்‌ பூமியும்‌ மாறிப்‌ போயினும்‌ வாக்கு மாறாத ஓர்‌ வல்ல மீட்பர்‌ காப்பார்‌ வழுவாது உள்ளங்‌ கையில்‌ வைத்தே கலங்கிடாதே நீ வா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3833
Song ID
jeevanin-ootraamay-yesu-paran-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open