Jeeviyamae Orae Jeeviyamae ஜீவியமே ஒரே ஜீவியமே

ஜீவியமே ஒரே ஜீவியமே
Unknown
Lyrics

Lyrics

ஜீவியமே ஒரே ஜீவியமே அண்ட சராசரம் அனைத்திலுமே மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும் பூமியில் வாழ்வது ஒரே தரமே – ஜீவியமே 1. பிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல் இடையில் இருப்பது வாழ்க்கையாகும் இயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும் பரிசுத்தர் ஆட்சியில் சாட்சி கூறும் இதை விடில் முடிவது வீழ்ச்சியாகும் — ஜீவியமே 2. நித்தம் நமைவிட்டுச் செல்வார் பாரீர் அவர் யாரும் செல்லும் அவ்விடமும் பாரீர் அலறலும், புலம்பலும் உடல்தனைக் கீறலும் நரகத்தின் தினசரிக் காட்சி கேளீர் இரக்கத்தின் வழி காணார் கதியும் காண்பீர் — ஜீவியமே 3. திறப்பின் முகம் நிற்க ஆட்கள் தேவை தியாகத்தின் பாதைக்குச் செல்வோர் தேவை ‘என்ஜனம் அழியுதே’ என ஏங்கும் ஆண்டவர் துக்கத்தைத் தணிக்கும் சீஷர் தேவை முன் வருவோர் யார்க்கும் இதுவே வேளை — ஜீவியமே 4. எண்ணிப்பார் கழிந்திட்டக் காலமதை கதையைப் போல் மனிதரின் நாட்கள் செல்லும் உலகத்துச் சேவை சாகையில் ஓயும் உன்னுடன் மரித்த பின் வருவதேது? கிறிஸ்துவின் சேவை நிலைத்து நிற்கும் — ஜீவியமே 5. அர்ப்பணம் தந்தையே கை அளித்தேன் கல்வி, செல்வம், சுகம் பொருள் அனைத்தும் செல்லுவேன், சொல்லுவேன் இயேசுவை வழி என வாழ்க்கையில் தம்மையே கொண்டு வாழ்வேன் என்றுமே அங்கே நான் உம்மில் வாழ்வேன் — ஜீவியமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2753
Song ID
jeeviyamae-orae-jeeviyamae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0