Jeyam Geetham Paaduvom ஜெயத்தின் கீதம் பாடிடுவோமே

ஜெயத்தின் கீதம் பாடிடுவோமே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஜெயத்தின் கீதம் பாடிடுவோமே சீர்புது சாலேமிலே 1. தேவன் நம்மோடு வாசம் செய்வாரே திருக்கரத்தால் எம் துயர் துடைப்பாரே துக்கமில்லையெ துன்பமில்லையே துதியின் கானமே தொனித்திடுமே 2. இரத்தினக் கல்லைப் போல் ஒளி வீசும் ராக்காலமில்லா இன்ப நகரில் ஈராறு முத்து வாசல்களுண்டே இதுவே மணவாட்டியாம் சபையே 3. சந்திர சூரியர் வேண்டுவதில்லையெ சர்வ வல்ல தேவ மகிமையுண்டதிலே சுந்தர ஆட்டுக் குட்டியாம் விளக்கே சந்ததம் ஆலயமும் இவரே 4. அப்போஸ்தலரின் பன்னிரு பேர்கள் அஸ்திபாரத்தின் கற்களிலுண்டே ஒப்பில்லா இயேசு மூலைக்கல்லாகி இசைத்ததினால் விலையேறப் பெற்றோர் 5. தீட்டும் திருடும் தீச் சொல்லும் தீங்கும் திளைத்தவர் அதினுள் கடந்திடுவாரோ தேவாட்டுக் குட்டியின் ஜீவாகமமதில் நாமமுள்ளோரே அதில் நடப்பார் 6. தாகமுள்ளோரே வருவீரே ஜீவ தண்ணீரின் ஊற்றில் பருகி மகிழவே ஜெயிப்போரே யாவும் சுத்திகரிப்பாரே தேவனின் புத்திரராகிடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7221
Song ID
jeyam-geetham-paaduvom-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open