Jodhigale Ellorum Kartharai ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை ஏகமாய்

ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை ஏகமாய்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை ஏகமாய் துதித்தே போற்றிப்பாடுங்கள் தேவன் அளித்த நன்மை பெரியதே கர்த்தரின் உண்மை என்றும் மாறிடாதே 1. இன்றித் தினம் கூடி உம்மைப் போற்றிப் பாட ஈந்தளித்தீர் உந்தன் கிருபை இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் என்றும் அவர் துதி பாடி மகிழ்வோம் 2. ஜீவன் சுகம் பெலன் யாவும் இயேசு தந்தார் சேதமின்றி என்னைக் காத்தாரே ஜீவியப் பாதையில் தேவை தந்து ஜெயக்கீதம் பாட ஜெயமளிப்பார் 3. பாவ சாப ரோகம் முற்றும் என்னில் நீக்கி சாவு பயம் யாவும் போக்கினார் சோதனை வேதனை சூழ்கையில் சோர்ந்திடாமல் தாங்கி பெலனளிப்பார் 4. எந்தன் பாவம் யாவும் மன்னித்து மறந்தார் சொந்த பிள்ளைகளாக மாற்றினார் நாடியே வந்தென்னை ஆதரித்து வாக்களித்தார் நித்திய ஜீவன் ஈந்திட 5. வானம் பூமியாவும் மாறிப்போகும் ஓர் நாள் வானவரின் வாக்கு மாறாதே நீதியின் சூரியன் தோன்றிடும் நாள் சேர்த்திடுவார் ஆவலாய் காத்திருப்போரை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5592
Song ID
jodhigale-ellorum-kartharai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open