Lyrics
1 காலை ஒளி தோன்றவே
காரிருளும் நீங்கவே
கர்த்தன் வந்து கன்னியை - வீடு சேர்ப்பார்
தேவ வாசம் நம்முடன்
புது எருசலேமிலே
கண்ணீர் யாவும் துடைப்பார் - காலை வேளை
பல்லவி
அல்லேலூயா - அல்லேலூயா
முகா முகமாய்க் காணலாம்
பூவில் ஓடி முடிந்த பின்
அல்லேலூயா - அல்லேலூயா
காண்போம் அவர் கிருபையால் – அல்லேலூயா
2. கண்ணிமைப் பொழுதிலே
காசினிவிட் டேகுவோம்
காகளம் தொனிக்குமே - அல்லேலூயா
கரை சேர்வோம் கடைசியாய்
பயம் துக்கம் போகுமே
ஆளுவோம் இயேசுவுடன் – அல்லேலூயா – அல்லேலூயா
3. ஆட்டுக்குட்டி சீயோனில்
கூட்டர் பரிசுத்தர் தான்
நெற்றியி லிருப்பது - தேவ நாமம்
கூட்டமாகச் சேர்ந்தவர்
புதுப் பாட்டுப் பாடுவார்
முதற் பலனிவர்களே - அல்லேலூயா – அல்லேலூயா
4. சந்தோஷக் கீதங்களோடு
சந்தோஷிப்போம் நாமெல்லோரும்
மைந்தன் மண நாளதில் - அல்லேலூயா
மகிமை இராஜ்ஜியங்களில்
தரித்து வெண்மை வஸ்திரம்
போரில் வென்றோர் வாழுவோம் அல்லேலூயா
Details
- Numeric ID
- 1552
- Song ID
- kaalai-oli-thontravae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0