Kaalaiyil Devanai Thedu Jeeva காலையில் தேவனைத் தேடு – ஜீவ
காலையில் தேவனைத் தேடு – ஜீவ
Lyrics
காலையில் தேவனைத் தேடு – ஜீவ
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு
சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு
சீரான நித்திய ஜீவனை நாடு
மன்னுயிர்க்காய் மரித்தாரே – மனு
மைந்தனென நாமம் வைத்திருந்தாரே
உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு
உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு
பாவச் சோதனைகளை வெல்லு – கெட்ட
பாருடல் பேயுடன் போருக்கு நில்லு
ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
சிந்தனை செய் மனுவேலனைப் பணிய
சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடை
செய்யா திருங்களென்றார் மனதார
பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்
பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும்
வேலையுனக்குக் கைகூட – சத்ய
வேதன் கிருபை வரத்தை மன்றாட
காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே
கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே
Details
- Numeric ID
- 5250
- Song ID
- kaalaiyil-devanai-thedu-jeeva-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1