Kaanaan Payanamo Thooram கானான் பயணமோ தூரம் எகிப்தை

கானான் பயணமோ தூரம் எகிப்தை
Unknown
PPT
Lyrics

Lyrics

1. கானான் பயணமோ தூரம் எகிப்தை கடந்து நாம் சென்றிடுவோம் கர்த்தர் இயேசு உடன் வருவாரே கானானை களிப்புடன் சேர்ந்திடுவோம் 2. பார்வோனின் சேனை பின் தொடர்ந்தாலும் செங்கடல் எதிரே தெரிந்தாலும் செங்கடலைப் பிளந்து இஸ்ரவேலை நடத்தும் சேனைகளின் கர்த்தர் உடன் வருவார் ஒரு சேதமின்றி நம்மை நடத்திடுவார் 3. வனாந்திர வழியே நடத்திடுவார் வாதைகள் ஏதுமின்றி காத்திடுவார் வானத்தின் மன்னாவால் போஷித்து காக்கும் வல்ல நம் கர்த்தர் உடன் வருவார் தினம் வழுவாமல் நம்மை நடத்திடுவார் 4. மாராவின் தண்ணீரைக் கடந்திடுவார் ஏலீம்மின் நீரூற்றைக் கண்டிடுவோம் மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றும் மகிமையுள்ள கர்த்தர் உடன் வருவார் அந்த மகிழ்ச்சியினால் நாம் கடந்திடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3939
Song ID
kaanaan-payanamo-thooram-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open