Kaanaga Pathai Kadum Malaiyum கானக பாதை காடும் மலையும்

கானக பாதை காடும் மலையும்
Unknown
PPT
Lyrics

Lyrics

கானக பாதை காடும் மலையும் காரிருளே சூழ்ந்திடினும் மேகஸ்தம்பம் அக்கினி தோன்றும் வேகம் நடந்தே முன் செல்லுவாய் பயப்படாதே கலங்கிடாதே பாரில் இயேசு காத்திடுவார் பரம கானான் விரைந்து சேர்வாய் பரமனோடென்றும் வாழ்ந்திடுவாய் எகிப்தின் பாவ வாழ்வை வெறுத்தே இயேசுவின் பின்னே நடந்தே தூய பஸ்கா நீ புசித்தே தேவ பெலனால் முன் செல்வாய் கடலைப் பாரும் இரண்டாய் பிளக்கும் கூட்டமாய் சென்றே கடப்பாய் சத்ரு சேனை மூழ்கி மாளும் ஜெயம் சிறந்தே முன் செல்லுவாய் குளிர்ந்த ஏலீம் பன்னீருற்றும் காணுவாய் பேரீச்ச மரம் கன்மலையில் தாகம் தீர்த்து மன்னா ருசித்தும் முன் செல்லுவாய் கசந்த மாரா உன்னைக் கலக்கும் கஷ்டத்தால் உன் கண் சொரியும் பின் திரும்பி சோர்ந்திடாதே நன்மை அருள்வார் முன் செல்லுவாய் கொடுமை யுத்தம் உன்னை மடக்கும் கோர யோர்தான் வந்தெதிர்க்கும் தாங்கும் கர்த்தர் ஓங்கும் கையால் தூக்கிச் சுமப்பார் முன் செல்லுவாய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3936
Song ID
kaanaga-pathai-kadum-malaiyum-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open