Lyrics
காப்பவரே என்னை காப்பவரே
சோதனைக்கு விலக்கி காப்பவரே
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே-2
1.போக்கையும் வரத்தையும் காப்பவரே
பொழுதெல்லாம் காத்து நடத்துமையா-2
இரவும் பகலும் காப்பவரே
எப்போதும் காத்து நடத்துமையா-2
எப்போதும் காத்து நடத்துமையா-காப்பவரே
2.உறங்காமல் தூங்காமல் காப்பவரே
உமக்காக வாழ்ந்திட உதவுமய்யா
தீமைகள் விலக்கியே காப்பவரே
தீயவன் செயல்களை முடக்குமையா-2
தீயவன் செயல்களை முடக்குமையா-காப்பவரே
3.ஆவி ஆத்மாவை காப்பவரே
பரிசுத்த வாழ்வை தாருமையா-2
வழுவாமல் தினமும் காப்பவரே
வருகையில் உம்மோடு சேருமையா-2
வருகையில் உம்மோடு சேருமையா-காப்பவரே
Details
- Numeric ID
- 1541
- Song ID
- kaappavare-ennai-kappavarae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0