Kaarirulaal Moodapatta Song பாமாலை: 208 காரிருளால் மூடப்பட்ட
பாமாலை: 208 காரிருளால் மூடப்பட்ட
Lyrics
1. காரிருளால் மூடப்பட்ட
பர்வதங்கள் மேலே பார்
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட
ஜோதி தோன்றச் செய்கிறார்
அதற்காக
நெஞ்சமே, மகிழ்ச்சி கொள்.
2. அதைத் தேசத்தார் எல்லாரும்
காணச் செய்யும் கர்த்தரே
அந்தகாரமுள்ள யாரும்
அதால் சீராவார்களே;
நீர் சகித்த
சாவின் பலன் அதுவே.
3. இப்போ லட்ச லட்சமான
பேர்கள் அருள் பெற்றது
உம்முடைய உண்மையான
அன்பினாலே ஆயிற்று;
அதற்காக
உமக்கே மா ஸ்தோத்திரம்.
Details
- Numeric ID
- 5081
- Song ID
- kaarirulaal-moodapatta-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0