Kadavul Unakku Vazhvu கடவுள் உனக்கு வாழ்வு தந்தார்

கடவுள் உனக்கு வாழ்வு தந்தார்
Unknown
PPT
Lyrics

Lyrics

கடவுள் உனக்கு வாழ்வு தந்தார் வாழ்வுக்கு நீ என்ன தந்தாய்? என்ன தந்தாய் நீ என்ன தந்தாய்? கடவுள் எனக்கு வாழ்வு தந்தார் வாழ்வுக்கு நான் என்னைத் தந்தேன் என்னைத் தந்தேன் நான் என்னைத் தந்தேன் பார்த்திட உனக்கு கண்கள் தந்தார் கனிவுடன் மனிதரைப் பார்த்தாயா? பார்த்தாயா இனி பார்ப்பாயா? பார்த்திட எனக்கு கண்கள் தந்தார் கனிவுடன் மனிதரைப் பார்த்தேனே -2 பார்த்தேனே இனி பார்ப்பேனே மன்னிக்க நல்ல மனதைத் தந்தார் முழுமனதுடன் நீ மன்னித்தாயா? மன்னித்தாயா நீ மன்னிப்பாயா? மன்னிக்க நல்ல மனதைத் தந்தார் முழுமனதுடன் நான் மன்னித்தேனே - 2 மன்னிப்பேனே இனி மன்னிப்பேனே உழைத்திட நல்ல கரங்கள் தந்தார் நேரிய நிலை நின்று உழைத்தாயா? உழைத்தாயா நீ உழைப்பாயா? உழைத்திட நல்ல கரங்கள் தந்தார் நேரிய நிலை நின்று உழைத்தேனே - 2 உழைத்தேனே இனி உழைப்பேனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5499
Song ID
kadavul-unakku-vazhvu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open