Kaalamae Thaevanaith Thaedu Jeeva காலமே தேவனைத் தேடு ஜீவ

காலமே தேவனைத் தேடு ஜீவ

Lyrics

காலமே தேவனைத் தேடு ஜீவ காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு சீலமுடன் பதம் பாடிக்கொண்டாடு சிரான நித்திய ஜீவனை நாடு 1.மன்னுயிர்க்காய் மரித்தாரே மனு மைந்த னெனநாமாம் வைத்திருந்தாரே உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு உள்ளங்கனிந்து தனி ஜெபம் பண்ணு 2.பாவச் சோதனைகளை வெல்லு கெட்ட பாருடல் பேயுடன் போருக்கு நில்லு ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச் சிந்தனை செய் மனு வேலனைப் பணிய 3.சிறுவர்கள் என்னிடஞ் சேரத் தடை செய்யா திருங்களென்றார் மனதார பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும் பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும் 4.வேலையுனக்குக் கைகூட சத்ய வேதன் கிருபை வரத்தை மன்றாட காலை தேடுவோர் எனைக் கண்டடைவோரே கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2280
Song ID
kalame-devanai-thedu
Views
13
Downloads
3
Source
Open