Kaliguruvom Karthar Nam களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே
களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே
Lyrics
களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே
தம் இரத்தத்தால் நம்மை மீட்டார்
அவர் நமக்கு யாவிலும் எல்லாமே
எப்பாவம் பயம் நீக்குவார்
கர்த்தர் நம் பட்சம் கர்த்தர் நம்மோடு
கர்த்தர் சகாயர் யார் எதிர்க்க வல்லோர்
யார் எதிர்க்க வல்லோர் யார் வல்லோர்
திடனடைவோம் தீமை மேற்கொள்ளுவோம்
கர்த்தாவின் வல்ல கரத்தால் உண்மை
பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம்
அவரே திடன் ஆகையால்
வாக்கை நம்புவோம் உறுதி மொழியாய்
கிறிஸ்துவில் ஆம் ஆமேன் என்றே
பூமி ஒழிந்தும் என்று உறுதியாய்
நிலைக்கும் இது மெய் மெய்யே
நிலைத்திருப்போம் கர்த்தருன் கட்டினில்
அதால் நித்திய ஜீவன் உண்டாம்
பற்றும் ஏழையைத் தம் வல்ல கரத்தில்
வைத்தென்றும் பாதுகாப்பாராம்
Details
- Numeric ID
- 6949
- Song ID
- kaliguruvom-karthar-nam-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open