Kallum Allave Kayam Song

Lyrics

கல்லும் அல்லவே காயம் – வல்லும் அல்லவே – இது வெள்ளி பொன் விலைமதியா மேரும் அல்லவே வல்லமை பேசாதே நாளை வருவதறியாய் – அதால் நல்ல வழி தேடி தேவ நாமத்தைத் தியானி சூரியன் கீழ்க் கண்டதெல்லாம் மாயை அல்லவோ – சாலமோன் பார் அறியச் சொன்னதை நீ பார்த்தறியாயோ காற்றடித்த மேகம் புகைக்கொப்பதாகவே – இங்கே போற்றிய மனுடர் ஜீவன் போய் ஒழியுமே வேகமாய் வடியும் ஆற்றுக் கொப்பதாகவே – மாய தேக நரர் நாட்களும் சீக்கிரம் கழியுமே இராப்பகல் இருள் வெளிச்சம் மாறும் வண்ணமே – ஐயோ நராட்களின் மகிழ்ச்சிக்கு மா மாறுதல் உண்டே பூவதும் உதிரும் பசும்புல்லும் வதங்கும் – அது போலவே நரர் உருவம் மாறிவதங்கும் மேலது கீழ் கீழதுமேல் ஆம் உருளைபோல் – நரர் மேன்மையும் வாழ்வும் கீழது மேலும் ஆகுமே நுண்ணிமை ஞானி என்றாலும் கீர்த்திபெற்றாலும் – ஐயோ அன்னவன் மலையும் நேரம் யாவும் கலையும் ஆசனம் துரைத்தனம் தத்துவங்கள் ஒழியும் – அர சாண்ட மன்னாரும் ஒரு நாள் மாண்டொழிவாரே யாவும் ஓட்டமாகப் பாயும் யாவும் அழியும் – மெய்த் தேவபக்தி யே கெலிக்கும் ஜீவன் நிலைக்கும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5688
Song ID
kallum-allave-kayam
Views
1
Downloads
1