Kalvaari Anbu Ennilae கல்வாரி அன்பு என்னில் பாயுதே
கல்வாரி அன்பு என்னில் பாயுதே
Lyrics
கல்வாரி அன்பு என்னில் பாயுதே
கல் நெஞ்சில் கொஞ்சம் ஈரம் ஊறுதே
அனுதினம் ஆறுதலை தரும்
சிலுவை நேசமே
எனை தினம் ஆண்டுகொள்ளும்
என் இயேசு தேவனே
1. பாவத்தில் மூழ்கி அழியும் என் நெஞ்சம்
பரிகாரம் தேட அடையும் உம் தஞ்சம்
சிலுவையின் நிழலில்
என்னுள்ளம் சரணம்
கிருபையின் மழையில்
குளிருண்ண நல் தருணம்
என் பாவம் போக்கும்
திரு இரத்தம் சிந்தும்
உம் நேசம் மீண்டும்
தர வேண்டும் இன்றும்
வாழ்வும் தாழ்வும் நீரே தேவா ஓ.. ஓ..
2. இரத்த பெருவெள்ளம் ஓட நான் கண்டு
இனியும் வாழ்வேனே உமக்காக என்று
ஏழை நான் கெஞ்சும் வேண்டுதல் கேட்டு
இரங்கும் என் தேவா மன்னிப்பு தந்து
எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்
உம் நெஞ்சம் மகிழ
இனி வாழ்வேன் நானும்
இயேசு என்னை காத்த தேவன் ஓ.. ஓ..
Details
- Numeric ID
- 6998
- Song ID
- kalvaari-anbu-ennilae-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open