Lyrics
கல்வார் சிலுவையில்
காயப்பட்டு மரித்து உயிர்த்தீரே
பாவங்கள் போக்கிடவே
சாபங்கள் நீக்கிடவே
அக்கிரமங்களுக்காய் அடிக்கப்பட்டு
நொறுக்கப்பட்டீரே
உம் தழும்புகளால் நான் குணமாக
நீர் காயப்பட்டீரே
சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டு
மரணத்தை ஜெயமாய்மாற்றினீரே
நித்திய ஜீவன் பெற்றிடவே
ஜீவக்கனியாய் தொங்கினீரே
அழகும் சௌந்தர்யமானவரே
அந்தக்கேடு அடைந்தவரே
நம்மை இலட்சணமாக்கிடவே – நீர்
அவலட்சனம் ஆனீரே
Details
- Numeric ID
- 5679
- Song ID
- kalvaari-siluvaiyil-thooyavare-natkunasingham-timothy
- Views
- 0
- Downloads
- 0