Kalvari Thiyaga Nadhane கல்வாரி தியாக நாதனே

கல்வாரி தியாக நாதனே

Lyrics

கல்வாரி தியாக நாதனே எனக்காய் குருசில் மரித்தீர் என் பாவ சாப ரோகம் நிந்தை அவமானம் தீர்ந்ததே அந்த நாளிலே-2 1.இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தமே எனக்காய் விலைக்கிரையமானதே-2 விலையேறப்பெற்றோனாய் என்னையும் மாற்றினீர் அன்பு நேசரே-2 2.என்னிலே நீர் வைத்த அன்பை காட்டிட (உம்) சொந்த குமாரனை பலியாக்கினீர்-2 எனக்காக நீர் வாதிக்கப்பட்டதால் என் சாபம் நீங்கி போனதே-2 3.என்னையே செல்வந்தனாக மாற்றிட சிலுவையில் தரித்திரரானீரே-2 செல்வந்தனானேனே உம் தரித்திரத்தால் நீர் எந்தன் ஐஸ்வர்யமானீர்-2 4.என்னையே நீர் உந்தன் நீதியாக்கிட என் அநீதிகளெல்லாம் ஏற்றுக்கொண்டீரே-2 உம் இரக்கம் உம் மாறா அன்பினால் என்னையும் சொந்தமாக்கினீர்-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1950
Song ID
kalvari-thiyaga-nadhane-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1