Kalvariyil Thongukinrar Un Song கல்வாரியில் தொங்குகின்றார் உன் பாவம் நீக்க தம்மைத் தந்தார்
கல்வாரியில் தொங்குகின்றார் உன் பாவம் நீக்க தம்மைத் தந்தார்
Lyrics
கல்வாரியில் தொங்குகின்றார்
உன் பாவம் நீக்க தம்மைத் தந்தார்
உந்தன் சிலுவை ஏற்றனரே
வேர்வையும் இரத்தமாக ஆத்துமா
வியாகுலம் அடைந்தாரே இயேசு
உனக்காக தந்தையே உம் சித்தம்
என்று இயேசு கதறினாரே
சிரசினில் முள்முடி சிவப்பங்கி தரித்தோராய்
நிந்தை யாவும் உனக்காய் ஏற்றாரே
வாரினால் அடிபட்டார்
கோரமான காட்சியானார்
மாசற்ற தேவனே மகிமை யாவும்
துறந்தோராய் நீச குருசில் இயேசு தொங்கினார்
பாவத்தை போக்கியே
நீதிக்கு பிழைக்க செய்தார்
கைகளில் கால்களில் இரத்தமும் வடியுதே
உந்தன் நோய்கள் யாவும் ஏற்றாரே
சுகமே அடைவாய்
தழும்பாலே குணமடைவாய்
எத்தனை துன்பங்கள்
என்னையும் மீட்கவே
தியாக பாதை இயேசு காட்டினார்
நித்தமும் அவரின் பின்னே
சென்று வாழ்ந்திடுவாய்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 2311
- Song ID
- kalvariyil-thongukinrar-un
- Views
- 14
- Downloads
- 2