Kanneeraal Nandri Solgiraen Devaaa கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவா

Lyrics

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவா கணக்கில்லா நன்மை செய்தீரே – 2 நன்றி நன்றி ஐயா இயேசையா பல கோடி நன்மை செய்தீரே – 2 1.தாழ்வில் என்னை நினைத்தீரே தயவாய் என்னை உயர்த்தினீரே உந்தன் அன்பை என்ன சொல்லுவேன் தாயின் கருவில் தெரிந்து கொண்டீர் உள்ளங்கையில் வரைந்து வைத்தீர் உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – 2 உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி நன்றி 2.போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர் உந்தன் சிறகால் மூடி மறைத்தீர் உந்தன் அன்பை என்ன சொல்லுவேன் கால்கள் இடறாமல் பாதுகாத்தீர் கன்மலையின் மேல் என்னை நிறுத்தினீர் உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – 2 உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி நன்றி 3.உந்தன் இரத்தம் எனக்காய் சிந்தி சிலுவையில் எனக்கு ஜீவன் தந்தீர் உந்தன் அன்பை என்ன சொல்லுவேன் பாவமெல்லாம் போக்கினீரே சாபமெல்லாம் நீக்கினீரே உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – 2 உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி நன்றி

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1859
Song ID
kanneeraal-nandri-solgiraen-devaaa-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1