Lyrics
கர்த்தர் எந்தன் மேய்ப்பர்
எனக்கொன்றும் குறைவில்லை
பத்திரமாய் என்னைக் காப்பார்
அவரின்றி ஒருவரில்லை -2
பசுமை நிறைந்த புல்லில் நிதம்
என்னை போஷித்து - அமர்ந்த
நீரூற்றண்டை அவர் என்னை சேர்ப்பித்து
சேதமின்றி ஆத்துமத்தை (2)
நித்தியமான நீதியின் பாதையில்
என்றும் நடத்திடுவார் (2)
சாவின் கோர சேதம்
நான் கண்டு அஞ்சேனே - தேவன்
வல்ல பாதம் என்றென்றும் தஞ்சமே
ஜீவ பரன் என்னோடிருப்பார்
அவர் தம் கோலும் அவர்
தடியும் என்னை தேற்றும்
பகைவர் முன்னே என்னை
அவர் மேன்மைப்படுத்தி - நிகரில்லாத
தைலம் பூசி என்னை உயர்த்தி
சாகும் வரை நன்மை தொடர
ஏக தேவன் வீட்டில்
நெடுநாள் நிலைத்திருப்பேன்
Details
- Numeric ID
- 1583
- Song ID
- karthar-en-meipar-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0