Karthar Enthan Meippar கர்த்தர் எந்தன் மேய்ப்பராய்
கர்த்தர் எந்தன் மேய்ப்பராய்
Lyrics
கர்த்தர் எந்தன் மேய்ப்பராய்
இருப்பதால் நான் கலங்கிடேன்
நீரே (அவ)ே என்னை நடத்துவதால்
சோர்ந்திடாமல் பின் தொடர்வேன்
அல்லேலூயா ஆராதனை (3)
என்றும் பாடி ஆராதிப்பேன்-2
1. எனது காலங்கள் உம் கரத்தில்
ஆதலால் நான் அஞ்சிடேனே -2
ஏற்ற நேரத்தில் உயர்த்திடுவீர்
இறுதி வரையிலும் நடத்திடுவீர் -2
2. மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடந்திட்டாலும் (நான்) பயப்படேனே
தேவரீர் நீர் என்னோடுண்டு
உமது கோலும் தடியும் தேற்றும்
3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மையும் கிருபையும் ஒன்றே போதும்
உமது சமூகத்தில் வாழ்நாளெல்லாம்
உண்மையாய் என்றும் உமை சேவிப்பேன்
4. வருவேன் என்று வாக்குரைத்தீர்
ஓர் நாள் என்னை கூட்டிச் செல்வீர்
நித்தியமாய் உம்மை ஆராதிப்பேன்
நிரந்தரமாய் உம்மோடு வாழ்வேன்
Details
- Numeric ID
- 6881
- Song ID
- karthar-enthan-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open