Lyrics
கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் மனுஷன் நான்
கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட மனுஷன் நான்-2
கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
அவரே என்னை ஆதரிப்பார்
கர்த்தரையே நான் நம்பிடுவேன்
ஒருபோதும் தள்ளாட விடமாட்டார்-2
1. மரம் உஷ்ணம் வருவதை பாராமல்
என் இலைகள் பச்சையாய் இருக்கும்
மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்
வருத்தமின்றி கனி கொடுக்கும்-2
என் வேர்கள் தண்ணீருக்குள்
என் நம்பிக்கை இயேசுவின் மேல்-2
2. நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு
என் காலத்தில் கனியைக் கொடுப்பேன்
இலையுதிரா மரம் போல் இருப்பேன்
நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்-2
உம் வேதத்தில் பிரியம் கொண்டு
அதை இராப்பகல் தியானிப்பதால்-2
3. உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை
என் வழியை வாய்க்கச் செய்திடுவேன்
புத்திமானாய் நடந்து கொள்வேன்-2
உம் வார்த்தை என் வாய்விட்டு பிரிவதில்லை
அதை தியானிக்க மறப்பதில்லை-2
Details
- Numeric ID
- 769
- Song ID
- karthar-mel-nambikai-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1