Kartharin Kirubaigalai Enrenrum கர்த்தரின் கிருபைகளை என்றென்றும்
கர்த்தரின் கிருபைகளை என்றென்றும்
Lyrics
கர்த்தரின் கிருபைகளை
என்றென்றும் பாடிடுவோம்
அவர் திருநாமத்தை
ஒருமித்து உயர்த்திடுவோம்
1. சந்ததம் அவர் புகழ் ஓங்கிடவே
சபையாம் நம்மை அழைத்தாரே
சாற்றிடுவோம் நம் துதியினையே
சர்வ வல்லவராம் இயேசுவுக்கே
2. ஜீவன் சுகம் பெலன் யாவும் ஈந்து
சேதமின்றி நம்மைக் காத்தாரே
பூரிப்புடனே நாம் பாடிடுவோட்ம
புதிய பெலத்தால் நிறைந்திடுவோம்
3. மரண பள்ளத்தாக்கில் நடந்திடினும்
மாபெரும் தீங்குக்கும் அஞ்சேனே
சோர்ந்து போகாமல் ஜெயம் பெறவே
கர்த்தரின் கிருபை எம்மோடிருக்கும்
4. ஜெய கெம்பீரமாய் நாம் பாடிடுவோம்
ஜெயம் முழங்க துதித்திடுவோம்
அல்லேலூயா நாம் ஆர்ப்பரித்தே
அல்லும் பகலும் பாடிடுவோம்
5. பொன்னிலும் விலையேறப் பெற்றதாம் நம்
நல் விசுவாசத்தைக் காத்துக் கொள்வோம்
மாற்றுவார் சாயலை அந்நாளிலே
மாண்புடனே அவர் மகிமையிலே
Details
- Numeric ID
- 5527
- Song ID
- kartharin-kirubaigalai-enrenrum-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open