Kartharin Naamam Palatha Thurugam கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
Lyrics
கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
நீதிமான் ஓடி சுகமடைவான் -2
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா -2
1 விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசத்தால் உலகை ஜெயித்திடுவான்
விசுவாசிக்கும் அவன் பதறிடான்
விசுவாசத்தை அவன் காத்துக் கொள்வான்
2.ஏழுதரம் விழுந்தாலும் எழுந்திடுவான்
ஏழுமடங்கு தீயிலும் பயப்படான்
வா சோதனையை தினம் சகித்திடுவான்
சோர்ந்து போகாமல் முன்செல்வான்
3.நீதியின் சூரியன் இயேசுவின்
செட்டைகளில் அடைக்கலம் புகுவான்
கொழுத்த கன்று போல வளர்ந்திடுவான்
கொழுப்பையும் நிணத்தையும் உண்டிடுவான்
4. பனையைப்போல் அவன் செழித்திடுவான்
கேதுருவை போல் அவன் தழைத்திடுவான்
முதிர்வயதிலும் கனி தந்திடுவான்
புஷ்டியும் பசுமையுமாயிருப்பான்
Details
- Numeric ID
- 6720
- Song ID
- kartharin-naamam-palatha-thurugam-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open