Karthar En Belan Anar கர்த்தர் என் பெலனானார்
கர்த்தர் என் பெலனானார்
Lyrics
கர்த்தர் என் பெலனானார்
அவரே என் கீதமானார் – 2
மகிழ்ச்சிக்குரல் வெற்றியின் தொனி – 2
எனது (நமது) கூடாரத்தில்
அல்லேலூயா – 4
அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு
– கர்த்தர் என்
1. கர்த்தர் என் பட்சத்தில்
இருப்பதால் பயப்படேன் – 2
மனிதன் எனக்கு எதிராய்
என்ன செய்யமுடியும் – 2
– மகிழ்ச்சிக்குரல்
2. இந்த நாள் நல்ல நாள்
யெகோவா தந்த நாள் – 2
களிகூர்ந்து மகிழ்ந்திடு
காரியம் வாய்க்கச் செய்வார் – 2
3. ஈக்கள்(தேனீக்கள்) போல் பாடுகள்
எனை சூழ்ந்து வந்தாலும் – 2
நெருப்பிலிட்ட முட்கள் போல்
சாம்பலாய் போகின்றன – 2
4. கர்த்தரின் வலக்கரம்
மிகவும் உயர்ந்துள்ளது – 2
பராக்கிரமம் செய்கின்றார்
வெற்றி தருகின்றார் – 2
5. விழும்படி தள்ளினார்கள்
என்னை வீழ்த்த முயன்றார்கள் – 2
கர்த்தரோ தாங்கினார்
கரம் நீட்டி உதவினார் – 2
Details
- Numeric ID
- 5551
- Song ID
- karththar-en
- Views
- 1
- Downloads
- 1