Karththarin Naal Nerungiduthae கர்த்தரின் நாள் நெருங்கிடுதே

கர்த்தரின் நாள் நெருங்கிடுதே
Unknown
PPT
Lyrics

Lyrics

கர்த்தரின் நாள் நெருங்கிடுதே தேவனின் வாக்கு நிறைவேறும் தேவன் விரும்பும் ஜீவியம் காத்து தேவனை சந்திக்க ஆயத்தமா 1.கர்த்தர் வரும் நாளை நோக்கிடும் நாமே கர்த்தரில் நெருங்கியே சேர்வோம் சுத்தர்கள் கூடும் ஐக்கியத்திலே என்றுமே நிலைத்தே வாழ்ந்திடுவோம் 2. அன்பு விசுவாசம் நம்பிக்கையுடனே தெளிந்த நல் ஜீவியம் செய்வோம் விழிப்புடன் நாமே காத்திருந்து களிப்புடன் ஏகியே பறந்திடுவோம் 3. கர்த்தர் வெளியாகும் நாளதைக் காண ஆவலாய் ஆயத்தமாவோம் குற்றமே இல்லா பக்தர்களாய் இயேசுவின் சந்நிதி சேர்ந்திடுவோம் 4. சமயம் வாய்க்காத வேளையிலும் வசனத்தை சாற்றியே மகிழ்வோம் புகழ்ச்சியும் மகிமை கனமடைய விசுவாசம் காத்துமே ஏகிடுவோம் 5. சுத்த மனச்சாட்சி காத்திடும் பக்தர் ஏகியே பறந்துமே போவார் கர்த்தரைக் காண பரவசமே கர்த்தரின் சாயலை அணிந்திடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6721
Song ID
karththarin-naal-nerungiduthae-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open