Kathirukiraen காத்திருக்கிறேன்

காத்திருக்கிறேன்
Unknown
Lyrics

Lyrics

நேரம் ஓடும், உலகம் மாறும், நிலவை மாற்றும் சூரியன் இந்த உலக வாழ்வு கடந்து போகும், ஒரு நிழல் போல மறைந்து போகும் – 2 காத்திருக்கிறேன் உம் வருகைக்காகவே உம் ராஜ்யத்தை அடையும் வரை காத்திருக்கிறேன் – 2 கண் மூடி நடந்தேன், தடுமாறி விழுந்தேன் உம் கரம் பிடித்து நடத்தினீரே கடல் போன்ற சோதனை என் முன்னே வந்தாலும் உம் வார்த்தையால் தேற்றினீரே – 2 சோதனை வந்தாலும் அஞ்ச வேண்டாம் கர்த்தர் நம்மோடு என்றும் இருப்பார் மரணத்தின் விளிம்பில் நின்றாலும் கூட நித்திய ஜீவ வாசலைத் திறப்பார் – 2 மனித பாவம் போக்க மனிதனானீர் இயேசுவே ரத்தத்தால் கழுவி உம் பிள்ளையாக மாற்றினீர் மரணமே, உன் கூர் எங்கே? பாதாளமே, உன் ஜெயம் எங்கே? – 2 இயேசு கிறிஸ்து பாவத்தைச் சுமந்தார் சிலுவையில் மரித்தாரே மரணத்தை வென்றவர் உயிர்த்தெழுந்தார் அவர் நாமம் மேலானதே – 2 நேரம் ஓடும், உலகம் மாறும், நிலவை மாற்றும் சூரியன் இந்த உலக வாழ்வு கடந்து போகும், ஒரு நிழல் போல மறைந்து போகும் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
496
Song ID
kathirukiraen-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0