Kavalai Vaikathae Maganae Nee கவலை வைக்காதே, மகனே, நீ

கவலை வைக்காதே, மகனே, நீ

Lyrics

கவலை வைக்காதே, மகனே, நீ கவலை வைக்காதே. கவலைவைத்திந்த உலகை – நாடி அபலமான வரனந்தங் – கோடி 1. பெற்ற பிதா நமக்கொன்று,-அவர்க் குற்ற செல்வம் நமக்குண்டு, உத்தம வேலை கைக்கொண்டு-செய்ய உனக்கென்ன குறையுண்டு? 2. என்ன நான் புசிப்பேனின்று-நாளை என்ன நான் குடிப்பேனென்று இன்னும் வீண்கவலைகொண்டு-தினம் ஏங்கிறாய் எப்பலனுண்டு? 3. காகங்களை நோக்கிப்பாரு-நல்ல களஞ்சியமுண்டோ? வேறு தாகம் பசிக்கவைக்காரு-இரை தருகிறாரென்று கூறு. 4. புல்லும் பூண்டும் காட்டில் வளரும்-பிழைப் பூட்டுவ ராரென்று கழறும், பொல்லாக் கவலையாற்றழலும்-மனம் பொறுமையில்லாமல் அலறும். 5. உடையின் கவலையாலே-மனம் உடையுமே பல வேளை, முடியுமோ உந்தனாலே-அல்ல முற்றுமது பிதாவேலை. 6. கானகலீலிப் பூப்போலே-கன ஞானி சாலமோன் தன் மேலே பூணவில்லையாகையாலே-பிதா புல்லுக்குடுத்து மாப்போலே. 7. கவலைப்பட்டோர் முழம் கூட்டும்-நரன் காசினியிலுண்டோ? காட்டும் குவலயமெல்லாம் போற்றும்-இயேசு கோமான் திருமொழிகேட்டும்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5253
Song ID
kavalai-vaikathae-maganae-nee-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1