Kettaal Kodupean Karththar கேட்டால் கொடுப்பேன் கர்த்தர்

கேட்டால் கொடுப்பேன் கர்த்தர்
Unknown
PPT
Lyrics

Lyrics

கேட்டால் கொடுப்பேன் கர்த்தர் இயேசு இவ்வாக்களித்தார் ஜெபித்தால் ஜெயமே சித்தம் போல் அவர் பதில் அளிப்பார் 1. போராட்டங்களும் மனபாரங்களும் பலவீனம் நோயும் வந்தால் தீங்கு நாட்களிலோ தீயோன் அம்புகளோ தீயை போல் பற்றி எரிந்திடினும் தேவ கேடகத்தால் ஜெயிப்போம் 2. கர்த்தர் பாதத்திலே நம்மை தாழ்த்திடுவோம் குற்றம் யாவும் அறிக்கை செய்வோம் கபடம் இல்லாத உதட்டில் பிறக்கும் கிருபை மிகும் ஜெபம் கேட்பார் கண்ணீர் யாவையும் துடைத்திடுவார் 3. அன்பின் ஆவியினால் அகமே நிறைந்தே அனலாக ஜெபித்திடுவோம் அவிசுவாசங்களோ அணுகாமலே நாம் அவர் அதிசயம் நடத்திடுவார் 4. பெருமூச்சுடன் நான் சிந்தும் கண்ணீரெல்லாம் துருத்தியில் சேர்த்திடுவார் நெற்றியில் முத்திரை பெற்று ஜெபவீரர் நித்தம் ஆபத்தை கடந்திடுவோம் நேசர் யேசெம்மை காத்து கொள்வார் 5. நினையாத நேரம் இயேசு வந்திடுவார் நித்தம் விழிப்பாய் ஜெபித்திடுவோம் அஸ்திபாரமுள்ள மூளைக்கல் சியோனில் அழகாகவே ஜொலித்திடுதே அதை நம்பி ஜெயம் பெறுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3722
Song ID
kettaal-kodupean-karththar-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open