Kiristhuvin Kalvaari Pali கிறிஸ்துவின் கல்வாரி பலி

கிறிஸ்துவின் கல்வாரி பலி
Unknown
PPT
Lyrics

Lyrics

கிறிஸ்துவின் கல்வாரி பலி உன் பாவம் தீர்க்கும் ஒரே வழி அருவருப்பான வாழ்க்கை மாற ஆபாச உலக வேட்கை தீர 1. அவராலன்றி இரட்சிப்பில்லை அவர் நாமமின்றி வேறொன்று இல்லை வானத்தின் கீழே பூமியின் மேலே வேறொரு தேவன் யாருமில்லை 2. நிம்மதியின்றி நிலைதடுமாறி அமைதி இல்லா வாழ்க்கை வாழ்ந்தது போதும் நெறிந்த நாணலை முறிக்காதவர் நொறுங்குண்ட நெஞ்சை தள்ளாதவர் 3. திருப்தி செய்யா லோகத்திற்ககாய் அலைந்து திரிவது ஏனோ இன்னும்? சமாதான பிரபு சஞ்சலம் நீக்கி அமைதியை காட்டுவார் உன் வாழ்க்கையில் 4. நம்முடைய மீறுதலினால் அவர் காயப்பட்டு நொறுக்கப்பட்டார் அடிக்கப்படும் ஆட்டைப் போல அவர் அன்று மௌனமாய் சகித்தார் 5. துணிகரமாய் பாவம் செய்து தேவனிடம் போவேன் என நினைத்தால் வெளிவேஷமாக பக்தியைக்காட்டி பரலோகம் எங்கே போகமுடியும்! 6. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கை செய்து விட்டுவிட்டால் மன்னிக்க அவர் உண்மையுள்ளவர் உனக்காய் சிலுவையில் ஜீவன் தந்தவர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6906
Song ID
kiristhuvin-kalvaari-pali-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open