kirubai ithe deva kirubai ithe …

கிருபையிதே தேவ கிருபையிதே
Unknown
PPT
Lyrics

Lyrics

கிருபையிதே தேவ கிருபையிதே தாங்கி நடத்தியதே இயேசுவிலே பொன் நேசரிலே அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம் 1. ஆருயிர் அன்பராய் எங்களுடனே ஜீவிய பாதையிலே – இயேசுபரன் அனுதினமும் வழி நடந்தே அவரது நாமத்தில் காத்தனரே — கிருபையிதே 2. எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே மகிமை சேர்ந்தனரே – பூரணமாய் காத்தனரே கர்த்தர் எமை கருணையினால் தூய சேவை செய்ய — கிருபையிதே 3. அன்பின் அகலமும் நீளம் உயரமும் ஆழமும் அறிந்துணர – அனுக்கிரகித்தார் கிறிஸ்துவிலே ஒரு மனையாய் சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் — கிருபையிதே 4. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே நித்திய ஜீவனை நாம் – பெற்றிடவே விசுவாசத்தில் நிலைத்திடுவோம் அசையாது அழைப்பினை காத்துக்கொள்வோம் — கிருபையிதே 5. ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன் வாருமென்றழைக்கின்றாரே – வாருமென்பீர் சீயோனே நீ பார் உனக்காய் நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் — கிருபையிதே 6. வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன் வியாதியும் வேதனையும் – வைத்தியராய் இயேசுவல்லால் சார்ந்திடவோ இகமதில் வேறெமக் காருமில்லை — கிருபையிதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4216
Song ID
kirubaiy-ithe-deva-kirubaiy-ithe-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0