Kodum Kolgathavin Kodumudiyil கொடுங் கொல்கொதாவின் கொடு முடியில்
கொடுங் கொல்கொதாவின் கொடு முடியில்
Lyrics
கொடுங் கொல்கொதாவின் கொடு முடியில்
கடுங்காயப்பட்ட நேசரைக் கண்டேன்
அக பாரத்தால் நான் பணிந்து நின்றேன்
மகனே இது உனக்காய் என்றார்
ஆஹா இன்பம் இன்பம் இனியென்றும் துன்பமில்லை
எந்தன் மகா இன்பராம் என் இயேசு வரும் நாளதினிலே
இனி நான் என்ன செய்ய என்றேன்
கனி தா என்று கனிவாய் சொன்னார்
இனி தாமதமோ நாதா என்றேன்
தொனி கேட்குங்காலம் சமீபம் என்றார்
நல் நேசருக்காய் கொடி பிடிப்பேன்
கல்வாரி அன்பை விளம்பிடுவேன்
நொடி நேரமதில் என்னைச் சந்திப்பார்.
முடி சூடி என்றும் ஆளுகை செய்வேன்
அங்கி வெள்ளையாக நிற்கும் ஜனம்
தங்கி தாபரிக்கும் காட்சி கண்டேன்
இந்த சேனையெல்லாம் எங்கிருந்தென்றேன்
வந்த உபத்ரவத்தில் நிலைத்தோர் என்றார்
துதி பாடிடும் தூதர் கனம்
துயர் நீங்கும் பின் மறுகணம்
துங்கன் இயேசுவின் தூயப் பிரசன்னம்
தங்க மாளிகையில் எங்கும் ஜொலிக்கும்
Details
- Numeric ID
- 5645
- Song ID
- kodum-kolgathavin-kodumudiyil-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open