Koopitta Velaiyilay Odi Vantheerea

கூப்பிட்ட வேளையிலே ஓடி வந்தீரே
Lyrics

Lyrics

கூப்பிட்ட வேளையிலே ஓடி வந்தீரே குறைகளெல்லாம் தீர்த்து புது பெலன் தந்தீரே நன்றியப்பா 2 இயேசப்பா நன்றியப்பா - 2 நன்றியப்பா நன்றியப்பா இயேசப்பா நன்றியப்பா - 2 கானாவூர் கல்யாண வீட்டில் சீஷரோடு வந்தீரே கற்சாடி தண்ணீரை கனி ரசமாய் மாற்றினீரே நிந்தை அவமானம் நீக்கி விட்டீரே சர்வ வல்ல தேவனே எங்கள் ஏசப்பா மரியாள் மார்த்தாளின் கண்ணீரை கண்டவர் மரித்த லாசருவை உயிரோடு எழுப்பினீர் அநாதையாய் விடாமல் ஆதரவு கொடுத்தீரே சர்வ வல்ல தேவனே எங்கள் ஏசப்பா முப்பத்தெட்டு வருஷமாக வியாதியிலே கிடந்தவனை படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று சொன்னீரே வியாதியை சிலுவையிலே சுமந்து தீர்த்து முடித்தீரே சர்வ வல்ல தேவனே எங்கள் இயேசப்பா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
koopitta-velaiyilay-odi-vantheerea
Slug
koopitta-velaiyilay-odi-vantheerea
Views
2
Downloads
1