Kumbidugiren Naan Kumbidugiren கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்
Unknown
Lyrics

Lyrics

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் – எங்கள் குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன் அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் – எனை ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன் நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் – பவ நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன் தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன் – நித்திய சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன் உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் – தொனித் தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன் ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் – ஒன்றும் ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன் திருவுருவானவனைக் கும்பிடுகிறேன் – தவிது சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன் குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் – யூதர் குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன் அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன் – என தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1983
Song ID
kumbidugiren-naan-kumbidugiren-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0