Kumbidugiren Naan Kumbidugiren Engal கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்

Lyrics

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்;-எங்கள் குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன். அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன்;-எனை ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்; நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன்;-பவ நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்; தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன்;-நித்திய சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்; உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன்;-தொனித் தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன். ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன்;-ஒன்றும் ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன் திருவுருவானவனைக் கும்பிடுகிறேன்;-தவிது சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்; குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன்;-யூதர் குருகுல தேவதையைக் கும்பிடுகிறேன்; அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன்;-என தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5687
Song ID
kumbudukiran-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
1
Downloads
1