Leviyarae Aasariyarae லேவியரே ஆசாரியரே

லேவியரே ஆசாரியரே
Unknown
Lyrics

Lyrics

லேவியரே ஆசாரியரே ஆனந்தமாய் நாம் கூடி வந்தோமே இயேசுவின் பாதத்தில் பரவசமாய் பாரத மீட்புக்காய் கிருபை பெறுவோம் – லேவியரே 1. எட்டுத் திசைக்கும் இயேசு புகழ் பரவ நித்திய சுவிசேஷம் ஏந்திச் செல்லுவோம் சாத்தானின் கட்டுகளை அறுத்திடுவோம் சத்திய சபை கட்டி எழுப்பிடுவோம் – லேவியரே 2. விசுவாச வீரர்களாய் எழுபிடுவோம் வெளிப்பாடு வரங்களை உபயோகிப்போம் பாதாளக் கட்டுகளை அறுத்திடுவோம் பரலோக பலன்களை சேர்த்துக்குவிப்போம் – லேவியரே 3. நம்பிக்கை நங்கூரமாய் நடந்திடுவோம் தாழ்மையின் ரூபங்களால் வளர்ந்திடுவோம் பாவத்தின் கட்டுகளை அறுத்திடுவோம் காரிய சமர்த்தர்களாய் நின்றிடுவோம் – லேவியரே 4. ஜெபத்தின் ஜெயங்களாய் முன் செல்லுவோம் தியான ஊற்றுகளில் தூது பெறுவோம் மாமிசத்தின் கட்டுகளை அறுத்திடுவோம் கண்ணீரின் பள்ளத்தாக்கில் கர்த்தரைக் காண்போம் – லேவியரே 5. பேச்சின் தூதர்களாய் பறந்திடுவோம் நடக்கையின் நகல்களாய் விரைந்திடுவோம் சமூதாயக் கட்டுகளை அறுத்திடுவோம் நன்மையின் வாசல்களாய் விழித்திடுவோம் – லேவியரே 6. இயேசுவின் காயங்களின் கனிகளே நாம் களிகூர்ந்து மகிழ்ந்து ஆடிப்பாடுவோம் அப்போஸ்தல ஊழியத்தில் ஆர்ப்பரிப்போம் ஆசீர்வாத மழைக்கு மேகங்களாவோம் – லேவியரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3413
Song ID
leviyarae-aasariyarae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0