Maanitarae! Poerrunkalae மானிடரே! போற்றுங்களே

மானிடரே! போற்றுங்களே
Unknown
Lyrics

Lyrics

மானிடரே! போற்றுங்களே! மாநிலத்தில் பறைசாற்றுங்களே! மேலானவர் இயேசு மேலானவர் ஆகாயம் பூமிக்கும் மேலானவர் – 2 1. இருளில் ஒளியும் இயேசு – நம் இதய விளக்கும் இயேசு மருள்வோர் வழியும் இயேசு – அவர் மனதின் உறுதி இயேசு அருளின் சுனையும் இயேசு – உயர் அன்பின் பொருளும் இயேசு 2. உலகம் அவரால் வாழும் – அதில் உயிர்கள் புனிதம் ஆகும் பலரின் வாழ்வு மாறும் – பாவப் பழிகள் யாவும் தீரும் நிலவும் மகிழ்ச்சி நாளும் – இனி நிறையக் குடும்பம் தோறும் 3. அலைகள் வாழ்வில் மோதும் – பலர் அழிவைக் காண நேரும் மலைகள் பெயர்ந்து போகும் – பலர் மனங்கள் பயந்து சாகும் நிலையாய்க் கரங்கள் கோர்ப்பார் – நம்மை நிஜமாய்க் கரையில் சேர்ப்பார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3448
Song ID
maanitarae-poerrunkalae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0