Maaratha Nithiya Nokkathaal …

மாறாத நித்திய நோக்கத்தால்
Unknown
Lyrics

Lyrics

1. மாறாத நித்திய நோக்கத்தால்‌ இயேசுவே மண்ணில் என்னை பிரித்தீர் மங்காஉந்தனின்‌ சேவை எங்கும்‌ செய்திடவே துங்கவனே எம்மைக்‌ கண்டீர்‌ பல்லவி அன்பிதுவே அன்பிதுவே - என்னை அழைத்த மா அன்பிதுவே அன்பில்‌ பரிசுத்தனாய்‌ என்னை நிறுத்த பிதா நினைத்த பேரன்பிதுவே 2. பாடுகள்‌ சகிக்க தேவ ஜனத்தோடே பரனே அன்பாய்‌ அழைத்தீர்‌ வீடும்‌ நாடும்‌ இனம்‌ ஜனம்‌ யாவும்‌ மறந்து நாம்‌ இயேசுவே உம்மைப்‌ பின்‌ செல்ல — அன்பிதுவே 3. சந்தோஷத்தோடே எம்‌ ஜீவனை ஊற்றிட சுவிசேஷ சேவையிலே நிந்தை அவமானம்‌ தொல்லைகள்‌ துன்பங்கள்‌ துக்கங்கள்‌ உந்தனுக்காய்‌ சுமந்தே — அன்பிதுவே 4. தூதரும்‌ பெற்றிடா தூய நல்‌ சேவையை தாசர்‌ எமக்களித்தீர்‌ திவ்ய தூதுகள்‌ அளித்தே சபையை வளர்த்திட தந்தீர்‌ அப்போஸ்தலரை _. அன்பிதுவே 5. பூவில்‌ பிதாக்களைப்‌ போல்‌ ஜீவித்தோரெல்லாம்‌ பொற்பரன்‌ இயேசுவுடன்‌ சீயோன்‌ சிகரமீதில்‌ நின்று ஆளுகை செய்யும்‌. நாள்‌ சீக்கிரம்‌ வந்திடுதே _. அன்பிதுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3454
Song ID
maaratha-nithiya-nokkathaal-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0