Maasilla Devan Maaninlanthannil மாசில்லா தேவன் மாநிலந்தன்னில்
மாசில்லா தேவன் மாநிலந்தன்னில்
Lyrics
மாசில்லா தேவன் மாநிலந்தன்னில்
மானிடர் மீட்கவே அவதரித்தார்
மாசுள்ள என்னை மாசற்றதாக்க
மகிமையின் தேவன் மன்னுருவாயினார் (2)
பாடிடுவோம் கொண்டாடிடுவோம்
பரன் இயேசு பிறந்திட்ட நன்னாளையே – 2
வலியவரை அவர் தள்ளிவிட்டு
தாழ்மையுள்ளவரை உயர்த்தினார்
ஆபிரகாமுக்கும் சந்ததிக்கும்
இரக்கம் செய்தார் என்றென்றுமாய்
மரியாள் கீதம் பாடினார்
மகத்துவ தேவனே போற்றினார் – 2
புறஜாதிகளுக்கு ஒளியாயும்
இஸ்ரவேலுக்கு மகிமையும்
சகல ஜனத்திற்கு முன்பாகவும்
இரட்சணியமானார் என்றென்றுமாய்
சிமியோன் கீதம் பாடினார்
சீர்மிகு தேவனை போற்றினார் – 2
Details
- Numeric ID
- 8117
- Song ID
- maasilla-devan-maaninlanthannil-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open