Maasillamal Thooyathaana Song பாமாலை: 309 மாசில்லாமல் தூயதான
மாசில்லாமல் தூயதான
Lyrics
1. மாசில்லாமல் தூயதான
பளிங்கிலேயும் தெளிவான
சுத்தாங்க ஊற்றே, இயேசுவே;
கேரூபீங்கள் தூய சீரின்
பிரகாசம் யாவுந் தேவரீரின்
முன்பாக மங்கிப்போகுதே;
என் பாவத்தின் இருள்
அனைத்தும் உமக்குள்
தொலையட்டும்;
ஆ, இயேசுவே, நான் உமக்கே
ஒப்பாய் சுத்தாங்கமாகவும்.
2. மனசார சாவுமட்டும்
“பிதாவின் சித்தமே ஆகட்டும்”
என்றீர், அமர்ந்த இயேசுவே;
என் மனமும் “தெய்வ சித்தம்
என் நன்மை,” என்றதற்கு நித்தம்
கீழ்ப்பட்டடங்க, உம்மையே
பின்பற்ற, தேவரீர்
சகாயம்பண்ணுவீர்;
எந்நோவிலும்,
என் இயேசுவே, நான் உமக்கே
ஒப்பாய் அமர்ந்திருக்கவும்.
3. ராப்பகல் உறக்கமற்று
நல்மேய்ப்பராய்ப் பிரயாசப்பட்டு
நன்றாய் விழித்தீர், இயேசுவே;
நித்தம் நித்தமும் போதித்தீர்,
மங்கா வெளிச்சக் கண்ணனே;
விழித்துக் கெஞ்சவே,
நான் உம்மிடத்திலே
படிக்கட்டும்;
ஆ, இயேசுவே, நான்உமக்கே
ஒப்பாய்விழித்திருக்கவும்.
Details
- Numeric ID
- 4943
- Song ID
- maasillamal-thooyathaana-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1